search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு கட்டும் பணி"

    தருமபுரியில் வீடு கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரியை சேர்ந்தவர் பெருமாள் (வயது35). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் குமாரசாமிப் பேட்டை பகுதியில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார்.  நேற்றிரவு வீட்டின் மேல்பகுதியில் தொழிலாளர்களுடன் கான்கிரீட் போட்டு கொண்டிருந்தார். அப்போது கான்கிரீட் சரியாக போடப்பட்டுள்ளதா என்று பெருமாள் பார்த்து போது திடீரென மின்சாரம் எதிர் பாராத விதமாக தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படு காயம் ஏற்பட்டது.

    உடனே தொழிலாளர்கள் பெருமாளை மீட்டு தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அப்போது போகும் வழியிலேயே ஆம்புலன்சில் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஈரோடு அருகே வீடு கட்டும் பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

    ஈரோடு:

    ஈரோடு செம்படாம்பாளையம் நசியனூர் வெள்ளக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக பணியாளர்கள் இன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. இதில் சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த செல்வமும் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து செல்வம் மீது விழுந்து அவரை அமுக்கியது. இதில் இடிபாட்டில் சிக்கி செல்வம் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். இடிபாட்டுக்குள் சிக்கி கிடந்த செல்வம் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் யசோதா, சாஜிதாபானு ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×